பி.இ.: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2015

பி.இ.: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

பொறியியல் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது.2015-16 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தொடங்கியது. முதல் நாளில்விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இரண்டாம் நாளான திங்கள்கிழமை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இவர்களுக்கென மொத்தம் 5,136 பி.இ. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதில் பங்கேற்பதற்காக 219 மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டனர்.

அவர்களில்200-க்கும் குறைவானவர்களே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.மீதமுள்ள 4,900-க்கும் அதிகமான இடங்கள், பொதுப் பிரிவு கலந்தாய்வு இடங்களில் சேர்க்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்குகிறது.இதில் முதல் நாள் மட்டும் காலை 10 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் பொறியியல் கட்-ஆஃப் 200-க்கு 200 எடுத்தவர்கள் முதல் 198.25 கட்-ஆஃப் வரை எடுத்தவர்களுக்கு கலந்தாய்வுநடைபெறும்.அதற்கு அடுத்த நாள் முதல் காலை 7.30 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு பிரிவு என நாள் ஒன்றுக்கு 8 பிரிவுகளாக கலந்தாய்வு நடத்தப்படும். 8 ஆவது பிரிவு மாலை 6.30 மணிக்குத் தொடங்கும்.பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 28 ஆம் தேதி நிறைவு செய்யப்படும்.பின்னர், பிளஸ் 2 தொழில் பிரிவின் கீழ் படித்து பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 29, 30 ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி