கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2015

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பயிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ, மாணவியருக்கு அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இந்த கல்வி உதவித்தொகை பெறவிரும்பும் மேற்கூறிய மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, அவர்கள் பயிலும் கல்லூரி நிறுவனத்திலேயே வழங்கலாம். விண்ணப்பப் படிவத்துடன் வங்கி கணக்கு எண், ஆதார் எண் விவரங்களையும் கட்டாயம் இணைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை, www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளம் முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி