புதிதாக தொடங்கப்பட்ட திருப்பதி, பாலக்காடு ஐ.ஐ.டி.க்களில்மாணவர் சேர்க்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2015

புதிதாக தொடங்கப்பட்ட திருப்பதி, பாலக்காடு ஐ.ஐ.டி.க்களில்மாணவர் சேர்க்கை

திருப்பதி, பாலக்காடு ஆகிய இடங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஐஐடி-க்களில் தலா 4 துறைகளின் கீழ் மொத்தம் 120 இடங்களுக்கு, 2015-16 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது என சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறினார்.
கடந்த 2014 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த இரு ஐஐடி-க்களில் வருகிற ஆகஸ்ட் முதல் வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த ஐஐடி-க்களுக்கு அடுத்த 6 முதல் 10 மாதங்களில் புதிய இயக்குநர் நியமிக்கப்பட உள்ளார்.

அதுவரை அவற்றுக்கான வழிகாட்டி இயக்குநராக சென்னை ஐஐடி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து பாஸ்கர் ராமமூர்த்தி கூறியதாவது: இந்தப் புதிய ஐஐடி-க்களுக்கு இயக்குநர்கள் நியமிக்கப்படுகிற வரை, சென்னை ஐஐடி-தான் அவற்றை வழிநடத்தும்.அதுவரை திருப்பதி ஐஐடி-க்கு பொறுப்பு பேராசிரியராக கே.என். சத்தியநாராயணாவும், பாலக்காடு ஐஐடி-க்கு பொறுப்பு பேராசிரியராக பி.பி.சுனில் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த இரு ஐஐடி-க்களிலும் சிவில், கணினி அறிவியல், மின்னியல், இயந்திரவியல் ஆகிய 4 பி.டெக். துறைகளின் கீழ் தலா 30 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

முதல் 4 ஆண்டுகளுக்கு, அதாவது முதல் பிரிவு மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை தாற்காலிக கட்டடத்தில் இயங்க உள்ள இந்த ஐஐடி-க்கள், அதற்குள் அந்தந்த மாநில அரசுகள் சார்பில் ஒதுக்கித் தரப்படும் 500 ஏக்கர் நிலத்தில் நிரந்தர வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு மாற்றப்பட்டு விடும்.இதுபோல் வகுப்புகளை நடத்த சென்னை ஐஐடி-யிலிருந்து ஓய்வுபெற்ற தலைசிறந்த பேராசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள் ஆகியவையும் தயார் நிலையில் உள்ளன.எனவே, மாணவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 25) முதல் ஐஐடி-யில் சேருவதற்காக ஆன்-லைனில் படிவங்களை நிரப்பும்போது பாலக்காடு ஐஐடி, திருப்பதி ஐஐடி-க்களையும் விருப்பமாகத் தேர்வு செய்யலாம். இந்த இருஐஐடி-க்களிலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி