தெரிந்து கொள்வோம்: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பரிணாமம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2015

தெரிந்து கொள்வோம்: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பரிணாமம்

ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம், தமது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை புதிப்பித்து வருகிறது. இந்த ஆண்டும் ஆண்ட்ராய்டு புதிப்பிக்கப்பட்டு வரும் நவம்பர் மாதம் வெளிவர இருக்கிறது.தற்சமயம்
ஆண்ட்ராய்டு எம் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இயங்குதளம் விரைவில் ஜெல்லி பீன், கிட் கேட், லாலி பாப் போலவே வித்யாசமான பெயரில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் மில்க் ஷேக் மற்றும் முப்பின் போன்ற பெயர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களால் அதிகமாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறதாம்.கடந்த லாலிபாப் இயங்குதளத்தை ஒப்பிடும் போது இதில் நிறைய மாறுதல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிரது.

அதிக வேகம் மற்றும் பிங்கர் பிரிண்ட் போன்ற பாதுகாப்பு வசதிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்லாமல் கூகுளின் அதிவேக குரோம் செயல்பாட்டினையும் இணைத்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.பொதுவாக ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் போது பேட்டரி சார்ஜ் குறைவதை தடுக்க கால்ட் டோஸ் என்னும் புதிய ஆப் இணைக்கப்பட்டுள்ளதாம், இதனால் பேட்டரியின் செயல்பாடு அதிகரிக்கும் என தெரிவிக்க்ப்பட்டுள்ளது. இந்த இயங்குதளத்தின் முன்னோட்டத்தை நெக்ஸஸ் மொபைல் ஃபோன் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி