பள்ளிகளில் யோகா கட்டாய பாடமாக்கப்படும்: ஸ்மிருதி இராணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2015

பள்ளிகளில் யோகா கட்டாய பாடமாக்கப்படும்: ஸ்மிருதி இராணி

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,
மத்திய அரசு பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களுககும் யோகா கட்டாய பாடமாக்கப்படும். யோகா பாடத்தில் 80 மதிப்பெண்கள் செய்முறை தேர்வு மூலம் வழங்கப்படும் என்பதால் மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாது.இதற்கான பாடத்திட்டங்கள் தயாராகி வருவதாகவும் யோகா கலையில் இளங்கலை, முதுகலை,பட்டப்படிப்பு மற்றும் பட்டைய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மாணவர்கள் யோகா செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் தேசிய அளவிலான யோகா போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி