CPS: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: பதிவெண் பெறாதோருக்கு நிதித்துறை சலுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2015

CPS: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: பதிவெண் பெறாதோருக்கு நிதித்துறை சலுகை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துபதிவெண் பெறாதோர் தங்களுக்குரிய பதிவெண்ணைப் பெற ஆகஸ்ட் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலாளர் க.சண்முகம், அனைத்துத் துறை செயலாளர்கள், துறைகள், சட்டப் பேரவைச் செயலகம், கருவூலம்- கணக்குத் துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் கடந்த 2003, ஏப்ரல் 1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைவோருக்கு கருவூலத் துறைமூலம் பதிவெண் வழங்கப்படும்.

இந்த நிலையில், இதில் இணையாதவர்களுக்கும், திட்டத்தில் இணைந்து பதிவெண் பெறாதோருக்கும், வரும் ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் பொருந்தாது.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளோர், அவர்களுக்கு பதிவெண் வழங்கப்படுவது குறித்த அறிக்கைகளை கருவூலம்- கணக்குத் துறை இயக்குநர், மாநிலதரவு மைய ஆணையர் ஆகியோர் மாதத்துக்கு இரண்டு முறை அளிக்க வேண்டும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி