CRC ஈடுசெய் தற்செயல் விடுப்பு பற்றி தெளிவான உத்தரவு,ஒரு சில தினங்களில் - TNPTF - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2015

CRC ஈடுசெய் தற்செயல் விடுப்பு பற்றி தெளிவான உத்தரவு,ஒரு சில தினங்களில் - TNPTF

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர்.
இச்சந்திப்பில் மாநிலத் தலைவர் திரு.மோசஸ், மாநிலப் பொதுச்செயலாளர் திரு.பாலச்சந்தர், மாநிலப் பொருளாளர் திரு.ஜீவானந்தம், துணைப் பொதுச் செயலாளர் திரு.மயில், STFI பொதுக்குழு உறுப்பினர் திரு.சரவணன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் மாத்யூ மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

1. கருத்தாய்வு கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் துய்க்கக்கூடிய ஈடுசெய் தற்செயல் விடுப்பு பற்றி தெளிவான உத்தரவு பிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ஒரு சில தினங்களில் விளக்கத்துடன் கூடிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என இயக்குநர் உறுதியளித்துள்ளார்.
2. அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியடங்களை அந்தந்தமாவட்டத்திற்குள்ளேயே நிரவல் செய்ய வேண்டும் என்ற நமது கோரிக்கையை கனிவுடன் ஏற்றுக்கொண்டார்.
3. தொடக்கக்கல்வித்துறையில் உள்ள பள்ளிகளில் தேவைப்படும் பணியிடங்களை (Need Post) நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுத்த பின்புதான் உபரி பணியிடங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி விரிவாக அலசப்பட்டது. நமது தரப்பு நியாயத்தை புரிந்துகொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
4. இரண்டு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு நடுநிலைப்பள்ளிக்கென தனியாக துப்புரவு பணியாளர் நியமிக்கப்படும் எனவும், இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
5. திருநெல்வேலி மாவட்டம் - நாங்குநேரி, நாமக்கல் மாவட்டம் - பள்ளிபாளையம், விழுப்புரம் மாவட்டம் - வல்லம், கோயம்பத்தூர் மாவட்டம - கொண்டாமுத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள குளறுபடிகளை இணை இயக்குநர்(நிர்வாகம்) திருமதி.லதா அவர்கள் தலையிட்டு சரி செய்யப்படும் என உறுதியளிக்கட்டது.
6. சிவகங்கை மாவட்டம் - திருப்புவனம் ஒன்றியம் - பழையூர் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்க்கு ஒத்துழைப்பு நல்காமல், நிர்வாக சீர்கேட்டில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மீதான குறிப்பானையை நடைமுறைப்படுத்த உடனடியாக மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்க்கு அலைபேசி வழியாக இயக்குநர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
7. ஆசிரியர் விரோத போக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் புதுக்கோட்டை மாவட்;டம் - விராலிமலை மற்றும் பொன்னமரவாதி, திருவண்ணாமலை - ஆரணி, திருவாரூர் - திருவிளங்காடு, திருநெல்வேலி - ஏசு அடியான் ஆகிய உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீதும், நாங்குநேரி உதவித் தொடக்கக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் திருப்பூர் - காங்கோய வட்டார உதவித் தொடக்கக்கல்விஅலுவலக உதவியாளர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து விரிவாக மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநருடன் பேசப்பட்டது. அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக இயக்குநர் அவர்கள் உறுதியளித்தார்கள்.

1 comment:

  1. அந்த G.Pay 4200 ஐப் பற்றிப் பேச மறந்துவிட்டீர்களா? அல்லது எங்களையே மறந்து விட்டீர்களா? அல்லது பேச மறுத்துவிட்டீர்களா? எங்களின் "பொறுப்பா(ன)"ளர் சகோக்களே!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி