பள்ளி ஆசிரியை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் கைது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2015

பள்ளி ஆசிரியை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் கைது!

பள்ளி ஆசிரியரை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, புளியங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியராக இருப்பவர் சவுந்தரராஜன் 52.


இவரது வகுப்பில் பயிலும் மாணவர்கள் சிலர் கடந்த வியாழக்கிழமை வகுப்பிற்கு வராமல்கட் அடித்தனர்.இதனையறிந்த ஆசிரியர் மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளார். நேற்று காலை 9 மணியளவில் ஆசிரியர் சவுந்தரராஜன், தமது மகளை அங்குள்ள துவக்கப்பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.பள்ளியில் விட்டுவிட்டு வெளியே வந்தபோது, அங்கு மறைந்திருந்த மாணவர்கள் ஆசிரியரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.

சம்பவம் குறித்து ஆசிரியர் புளியங்குடி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, 11ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திகேயன் 17, சதீஷ்குமார் 18, ராமச்சந்திரன் 17, மணிகண்டன் 17 ஆகியோரை கைது செய்து நெல்லையில் உள்ள சிறுவர்களுக்கான காப்பகத்தில் அடைத்தனர்.

1 comment:

  1. why not implement teachers protection act in tamilnadu government?
    This is second incident for our computer teacher in tamilnadu, please give me protect from student beat, please discuss all are computer teacher in tamilnadu Hr.Sec.schools in this mater

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி