21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலை வெளியிட்டது யுஜிசி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2015

21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலை வெளியிட்டது யுஜிசி.

மாணவர்கள், பெற்றோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்இந்தியாவில் அங்கீகாரம் இன்றி இயங்கி வரும் 21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இந்தப் பல்கலைக்கழகங்கள் எந்தவித பட்டங்களை வழங்கவும் யுஜிசி அனுமதி வழங்கவில்லை. எனவே, இவற்றின் சார்பில் வழங்கப்படும் அனைத்துப் பட்டங்களும் அங்கீகாரம் அற்றவை எனவும் யுஜிசி அறிவுறுத்தியிருக்கிறது. இதில் அதிகபட்சமாக 8 போலி பல்கலைக்கழகங்களுடன் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்திலும், 6 போலி பல்கலைக்கழகங்களுடன் தில்லி இரண்டாம் இடத்திலும் உள்ளன.

தமிழகத்தில் ஒரே ஒரு போலி பல்கலைக்கழகம் இருப்பதாக இந்தப் பட்டியல் தெரிவிக்கிறது. போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் உத்தரப்பிரதேசம்: மஹிலா கிராம் வித்யபீத் மகளிர் பல்கலைக்கழகம் - அலாகாபாத் காந்தி ஹிந்தி வித்யபீத் - அலாகாபாத் ஹோமியோபதி நேஷனல் பல்கலைக்கழகம் - கான்பூர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் திறந்தநிலை பல்கலைக்கழகம் - அலிகரி உத்தர் பிரதேஷ் விஸ்வவித்யாலயா - மதுரா மஹாரானா பிரதாப் ஷிக் ஷா நிகேதன் விஷ்வவித்யாலயா - பிரதாப்கர் இந்திரபிரசாத ஷிக் ஷா பரிசத் - நொய்டா குருகுல் விஸ்வவித்யாலய விருந்தாவன்} மதுரா புது தில்லி: வாரணாசிய சம்ஸ்கிருத விஸ்வவித்யாலயா வணிகவியல் பல்கலைக்கழக நிறுவனம் - தரியாகஞ்ச் யுனைடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம் வொக்கேஷனல் பல்கலைக்கழகம் ஏடிஆர் சென்ட்ரிக் ஜூரிடிக்கல் பல்கலைக்கழகம் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்டு என்ஜினீயரிங் கர்நாடகம்: பதகான்வி சர்கார் வொர்ல்ட் திறந்தநிலை பல்கலைக்கழகம் - பெல்காம் மேற்கு வங்கம்: இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஆல்டர்நேடிவ் மெடிசின் - கொல்கத்தாதமிழகம்: டி.டி.பி. சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் - புதூர், திருச்சி பிகார்: மைதிலி பல்கலைக்கழகம் - தர்பங்கா கேரளம்: செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம் - கிஷநத் மத்திய பிரதேசம்: ஜபல்பூர் கேசர்வானி வித்யபீத் மகாராஷ்டிரம்: நாகபுரி ராஜா அரபிக் பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி