ஜூலை 24ல் ஐந்து மாவட்டகல்வி அதிகாரிகள் கூட்டம்-80% கீழ் தேர்ச்சி பெற்ற தலைமையாசிரியர்கள் அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2015

ஜூலை 24ல் ஐந்து மாவட்டகல்வி அதிகாரிகள் கூட்டம்-80% கீழ் தேர்ச்சி பெற்ற தலைமையாசிரியர்கள் அழைப்பு

மதுரையில் பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து ஐந்து மாவட்ட கல்விஅதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் ஜூலை 24ல் நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தை இயக்குனர்கள் கண்ணப்பன், அறிவொளி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) நடத்துகின்றனர்.

இதில் தேர்ச்சி குறைவிற்கான காரணம் குறித்து தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும், இக்கல்வியாண்டில் தேர்ச்சியை அதிகரிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தேர்வு முடிவுகள் குறித்து மண்டலம் வாரியாக இக்கூட்டங்கள் நடக்கின்றன. கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லுாரியில் இக்கூட்டம் நடக்கிறது. கல்வி அமைச்சர் வீரமணி, துறை செயலர் சபீதா பங்கேற்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி