+2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே ஆசிரியர்களின் தலையாய பணி! இயக்குநர் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2015

+2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே ஆசிரியர்களின் தலையாய பணி! இயக்குநர் பேச்சு

தொடர்ந்து கற்கும் ஆசிரியரால் மட்டுமே, பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்களை சிறப்பாக கற்பிக்க முடியும்,''என, தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், திருச்சியில் பேசினார்.
திருச்சி, பாரதிதாசன் சாலையில்உள்ள கேம்பியன் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மண்டல அளவிலானஆய்வுக் கூட்டம், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் நடந்தது.

இணை இயக்குனர் முத்து பழனியப்பன், இணை இயக்குனர் (எஸ்.எஸ்.ஏ.,) பொன்னையன், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், 2014-15ம் ஆண்டு, எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரையும் பாராட்டி சான்று வழங்கப்பட்டது.தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:தமிழக பள்ளி கல்வித்துறை மூலம், 32 மாவட்டங்களை, 9 மண்டலங்களாக பிரித்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம். கடலூர், வேலூரை தொடர்ந்து, திருச்சி மண்டலத்தில், நடக்கிறது. திருச்சி மண்டலத்தில், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டைஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில், திருச்சி மாவட்டம், ப்ளஸ் 2 தேர்வில், 95.3 சதவீதமும், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 97.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், கடந்தாண்டு, 10வது இடத்திலிருந்து முன்னேறி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், 89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.அடுத்து தலைமுறையை உருவாக்ககூடிய, 1.32 கோடி மாணவ, மாணவியர் பள்ளிகளில்படிக்கின்றனர். இதில், 8.32 சதவீதம் பேர் ப்ளஸ் 2வும், 10.56 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.ஸி.,யும் படிக்கின்றனர்.எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 தேர்வில் தோல்வியால், ஆண்டுதோறும் மாவட்டந்தோறும், 10 பேர் வரை தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே, தோல்வியை தாங்கும் மனப்பக்குவத்தை சொல்லிக் கொடுக்கும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும்.பருவத்திற்கு ஏற்ப மாணவ, மாணவிகளை பக்குவப்படுத்துவது ஆசிரியரின் கடமை. அதுபள்ளியில் மட்டுமே முடியும்.

தொடர்ந்து கற்கும் ஆசிரியரியால் மட்டுமே, பாடங்களை சிறப்பாக கற்பிக்க முடியும். தொழில் நுட்ப வளர்ச்சியால் பள்ளியில் படிப்பு மட்டுமின்றி, பாதுகாப்பும் அவசியமாகும்.நடப்பு கல்வி ஆண்டில், திருச்சி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை, 100 சதவீதமாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தை, 95 சதவீதமாக உயர்த்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். மாவட்டத்தில் சில பள்ளிகளில், 50 பேரும், சில பள்ளிகளில் 220 பேர் வரையிலும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 படிக்கின்றனர்.இவர்களுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் பின் தங்கிய மாணவ, மாணவியரை கண்டறிந்து, அவர்கள் எளிதில் புரிந்து கொண்டு கூடுதல் மதிப்பெண் பெற ஏதுவாக, புத்தகம் மற்றும் சி.டி.,யை வழங்கியுள்ளோம்.

இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து, மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்கவும், பின்தங்கிய பள்ளிகளில் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்துள்ள, பல ஆயிரம் கோடி நிதியை மூலதனமாக்கி, சிறந்த கல்வியை வழங்கி, எஸ்.எஸ்.எல்.ஸி.,மற்றும் ப்ளஸ்2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே ஆசிரியர்களின் தலையாய பணி.இவ்வாறு, அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி