தமிழக அரசின் 3-ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: 7 மாவட்டங்களில் இன்று தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2015

தமிழக அரசின் 3-ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: 7 மாவட்டங்களில் இன்று தொடக்கம்

தமிழக அரசின் சார்பில் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு நடைபெறும் மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21)தொடங்க உள்ளது.மத்திய அரசின் சார்பில் இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் தமிழகத்தில்
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் 4 மாதங்கள் நடைபெற்றன.இதில், இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு விடுபட்ட தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. காசநோய், மஞ்சள்காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி, தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

நான்கு மாதத்தின் முடிவில் இந்தத் திட்டத்தின்கீழ் 1.66 லட்சம் பேர் பயனடைந்தனர்.மேலும் 7 மாவட்டங்கள்: இதைப் பின்பற்றி தமிழக அரசின் சார்பில், மேலும் 7 மாவட்டங்களில் மே மாதம் முதல் தடுப்பூசி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி சென்னை, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர கள்ளக்குறிச்சி, தேனி, கரூர், தர்மபுரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பிரதேசங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: இதுவரை நேரடி முகாம்கள்,நடமாடும் முகாம்கள் என மொத்தம் 14,151 முகாம்கள் நடைபெற்றுள்ளன.

மத்திய அரசின் சார்பில் 8 மாவட்டங்கள், தமிழக அரசின் சார்பில் 7 மாவட்டங்கள் என மொத்தம் 15 மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இவை தவிர மீதம்உள்ள மாவட்டங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எந்தெந்தப் பகுதிகளில் விடுபட்ட குழந்தைகள் உள்ளனர் என்று கண்டறியப்படும். அந்தப் பகுதிகளில் வழக்கமாகநடைபெறும் முகாம்களைவிட கூடுதலாக சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி