செவிலியர் பட்டயப் படிப்பு: 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2015

செவிலியர் பட்டயப் படிப்பு: 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்

செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலிய பட்டயப் படிப்பு கல்லூரிகளில்நிகழ் கல்வியாண்டுக்கான மாணவிகள் சேர்க்கைக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பவிநியோகம் தொடங்கியது.
இந்தக் கல்லூரிகளில் சுமார் 2,100 இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 9 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர, தமிழக அரசின் www.tn.gov.in, www.tnhealth.org ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்ளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 250 ஆகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவிகள் ஜாதிச் சான்றிதழின் இரண்டு நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளான புதன்கிழமை அன்று தமிழகம் முழுவதும் 3,566 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் "செயலாளர், தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை' என்ற முகவரியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி