மாணவிகளின் உயர் கல்விக்கான "உதான்' திட்டம்: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2015

மாணவிகளின் உயர் கல்விக்கான "உதான்' திட்டம்: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி நாள்

மத்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் சேரும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் பயிற்சித் திட்டமான "உதான்' திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.


இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசித் தேதியாகும்.மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை மாணவிகள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., க்களில் சேருவதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் "உதான்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.இந்தத் திட்டத்தின் கீழ் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மட்டுமல்லாமல், அனைத்து மாநில அரசுப் பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் 1,000 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.ஆன்-லைன் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி புத்தகம், "டேப்லெட்' ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும். சந்தேகங்களைத் தெளிவுபடுத்த "ஹெல்ப் லைன்' வசதியும் ஏற்படுத்தப்படும்.

ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) விண்ணப்பிப்பது முதல் தேர்வு எழுதுவது வரைவழிகாட்டுதல் அளிக்கப்படும்.தகுதி: இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, கணிதம், அறிவியல் பாடங்களில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.மேலும் பிளஸ் 1 வகுப்பில் கணித, அறிவியல் பிரிவில் படித்து வரவேண்டும்.மேலும் விவரங்களுக்கு w‌w‌w.cb‌s‌e.‌n‌ic.‌i‌n என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி