தமிழ்ப் பல்கலை.யில் 5-ம் கட்டத் தேர்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2015

தமிழ்ப் பல்கலை.யில் 5-ம் கட்டத் தேர்வு முடிவுகள் வெளியீடு.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் கட்டத் தேர்வு முடிவுகள் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.இதுகுறித்து பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரிவு கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:


தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரிவு மூலம் கல்வியாண்டு மற்றும் துணைத் தேர்வுகள் நிகழாண்டு மே 20-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே 4 கட்டங்களாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இளநிலைப் பாடப் பிரிவில் தமிழ் இலக்கியம் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு, தொடு சிகிச்சை அறிவியல் இரண்டாமாண்டு போன்ற பாடப் பிரிவுகளிலும், முதுநிலைப் பாடப் பிரிவில் திருச்சி மறை மாவட்ட கல்விச் சங்கத்துடன் இணைந்து நடத்தப்படும் முதுநிலை தமிழிசை முதலாமாண்டு, முதுநிலை பரத நாட்டியம் முதலாமாண்டு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் நேரடியாக நடத்தப்படும் முதுநிலை தமிழிசை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு, முதுநிலை சமூகப் பணி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு, முதுநிலை வணிக மேலாண்மையில் நான்கு பருவங்களுக்கும், முதுநிலை பட்டயப் பாடப் பிரிவில் வழிகாட்டல், அறிவுரை பகர்தல் போன்ற பாடங்களிலும், சான்றிதழ் பாடப் பிரிவில் கோயில் கட்டடக்கலை பாடப் பிரிவிலும் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.இந்தத் தேர்வு முடிவுகளை www.tamiluniversity.ac.in என்றதமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி