ஜாதி, மத மோதல்களை தவிர்க்க மாணவர்களுக்கு கட்டுரை போட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2015

ஜாதி, மத மோதல்களை தவிர்க்க மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

மாணவர்கள் மத்தியில், ஜாதி, மத மோதல்களைத் தவிர்க்கும் வகையில், 'தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்' என்ற தலைப்பில், கட்டுரைப் போட்டி நடத்த, அரசுப் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.


அனைத்து மாநில அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், மத நல்லிணக்க கட்டுரைப் போட்டி நடத்த, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.இதையடுத்து, தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'தேசிய ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கம்' என்ற பெயரில், கட்டுரைப் போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.பள்ளிகளில் மாணவர்கள் அளவில், ஆக., 14ல், போட்டி நடத்தப்படும்.

இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.இந்தப் போட்டிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷயங்கள், மக்களிடம் ஒற்றுமையை உருவாக்குவது போன்ற தகவல்கள் அடிப்படையில், கட்டுரை எழுத, மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி