ராணுவத்தில் சேர 'ஆன் - லைனில்' விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2015

ராணுவத்தில் சேர 'ஆன் - லைனில்' விண்ணப்பம்

நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, ராணுவத்தில் சேர விரும்புவோர், இனி, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.


சென்னை பிராந்தியத்தில், இந்த புதிய முறை செப்டம்பரில் அமலாகிறது,'' என, ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அதிகாரி (சென்னைபிராந்தியம்), அவினாஷ் டி.பித்ரே கூறினார்.ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான உடன், ராணுவ ஆட்தேர்வு மையத்தின், புதிய இணையதளமான, joinindianarmy.nic.in- ல் காணப்படும் விண்ணப்பத்தை,'ஆன் - லைனில்' பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். ராணுவ வீரர் பணியில் சேர விரும்புவோருக்கு, தேவையான தகுதிகள்; 'ஆன் - லைன்' மனுவோடு இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள் விவரம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உட்பட, பல தகவல்களை இளைஞர்கள் அறிந்து கொள்ள, 'voober' என்ற புதிய மொபைல் போன், 'அப்ளிகேஷனை - ஆப்'பை, ராணுவம் முதன்முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் உபயோகிப்பாளர், அதை, 'கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி