அதிக மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2015

அதிக மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

விதிமுறை மீறி அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலுாரில் சமீபத்தில் தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்ததில் 31 மாணவர்கள் காயமடைந்தனர். முறையாக பராமரிக்காமல் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச்செல்வதுதான் இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.
இதனிடையே விதிமுறை மீறி அதிக மாணவர்களை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்களை கண்காணித்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர்கூறுகையில்,“ வாகனங்களை முறையாக பராமரித்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் அது மீறப்படுவதால் விபத்து ஏற்படுகிறது. பெரம்பலுார் சம்பவத்திற்குப்பின் துறை உயரதிகாரிகள் உத்தரவுப்படி அதுபோன்ற வாகனங்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைஎடுக்க காலை,மாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,”என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி