இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2015

இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி

ஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளை மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடந்து வந்தது.


ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டு வருகிறது. 2015-16க்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த 2 மாதங்களாக ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் கலந்தாய்வின் போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்த விபரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.இதன்படி கலந்தாய்வில் பங்கேற்க ஏற்கனவே வேலை பார்க்கும் இடத்தில் குறைந்தது ஒரு ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நியதி 3 ஆண்டாக மாற்றப்பட்டது. இதனால் ஒரு இடத்தில் 3 ஆண்டுக்கும் குறைவாக பணியாற்றிய பல ஆயிரம் ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சில விதிமுறைகள் தங்களுக்கு பாதகமாக இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள்எதிர்ப்பு தெரிவித்தன.

நிர்வாக காரணங்களால் இடமாறுதலுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகள் முறைகேடுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் வகையில் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். எனவே, இவற்றை மாற்றம் செய்து பழைய முறைப்படி கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நெறிமுறைகளில் மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாற்றங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் அனேகமாக ஆகஸ்டு முதல்வாரம் கவுன்சலிங் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

16 comments:

  1. B.T.english.....Mutual tranfr from MALEMARUVATHUR, KANGIPURAM DT......TO....salem.Namakkal...dharmapuri.....erode....pls CNTACT 8012998093

    ReplyDelete
  2. GOOD MORNING! Mr.Admin; kesav sir;;srimathi.;ramanujam sir;; pg trb reserve position nilai enna? engaluku counseling eppo varum? pls if you known share with us!!

    ReplyDelete
  3. PG TRB INTHA YEAR KIDAYATHU LATEST CONFIRMED NEWS

    ReplyDelete
  4. pg maths mutual tran from mimisal,pudhukkotai,to salem trichy,erode,namakkal,sankari,.....contact 9789190021

    ReplyDelete
  5. Is there any possibility for PG sep 2014 teachers to participate in general counselling if the rules is relaxed to 1/yr becoz we r jus 20 days short....

    ReplyDelete
    Replies
    1. Same doubt for me.if anybody know please clarify

      Delete
  6. Is there any possibility for PG sep 2014 teachers to participate in general counselling if the rules is relaxed to 1/yr becoz we r jus 20 days short....

    ReplyDelete
  7. கலந்தாய்வு எப்போது?

    ReplyDelete
  8. நான் செப்டம்பர் 26 -2014 இல் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.. TET இல் ஒரே பள்ளியில் இரண்டு பேர் பணியில் சேர்ந்தனர் . இருவருமே கணிதம்.... அதில் நான் ஒரு மாற்றுத்திறனாளி. எங்கள் பள்ளியில் இப்போது இரண்டு இடம் கணிதத்தில் பணி நிரவலில் உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரவலில் ஏதேனும் சிறப்பு சலுகை உண்டா? இப்போது பணியாற்றும் இடம் எனக்கு போதுமானதாக உள்ளது. தயவு செய்து தகவல் அளியுங்கள்....

    ReplyDelete
  9. Jul 24, 2015
    பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் தொடர்பான அரசாணை

    CLICK HERE-G.O.No. 270 Dt : July 10, 2012- SURPLUS TRS DEPLOYMENT- G.O REG...

    ReplyDelete
  10. Dear mutharasan..this go is actually 2012 go but i think that this will give u enough details

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Mutharation neengal virumbinal ankeye velaiparkalam intha counseling go

    ReplyDelete
  13. Pls anybody know means tel me.... when is tn lab assistant result. ... ? Whether case is over..? What is status of case ......?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி