விரைவில் அமலுக்கு வருகிறது புதுத்திட்டம் - ஆதார் அட்டை நகல் வழங்காத போலீசாருக்கு சம்பளம் கட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2015

விரைவில் அமலுக்கு வருகிறது புதுத்திட்டம் - ஆதார் அட்டை நகல் வழங்காத போலீசாருக்கு சம்பளம் கட்

ஆதார் அட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் உதவிகள், சலுகைகள் பெறுவது உள்ளிட்ட அனைத்துக்கும் முக்கியமானதாக உள்ளது. கைரேகைப் பதிவுகள், கருவிழிப் பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருப்பதால் அதை அடிக்கடி மாற்ற முடியாது.


குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை விரைவில் கண்டுபிடிக்க போலீசாருக்கு இது மிகவும் உதவிகரமாகஇருக்கும். மேலும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணையும் இணைக்கும் போது ஒருவரின் வருமானம் எவ்வளவு என்பதை அரசால் துல்லியமாக கண்காணிக்க முடியும். இப்படி பல வகைகளில் அரசுக்கும், மக்களுக்கும் ஆதார் எண் உதவிகரமாக உள்ளது.
இந்நிலையில், போலீசாருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து காவலர்களின் ஆதார் அட்டை நகல்களையும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என கமிஷனர் அலுவலக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு வேப்பேரியில் உள்ள புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. இதனால், போலீசார் தங்களது ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பித்து வருகின்றனர். சம்பளத்துடன் ஆதார் எண் விரைவில் இணைக்கப்பட உள்ளது. ஆதார் அட்டை நகல் வழங்காத போலீசாரின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி