'உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2015

'உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம்'

''உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், இந்திய அளவில், தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது,'' என, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின், வெள்ளி விழா நேற்று முன்தினம் நடந்தது.


வெள்ளி விழாதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், 1990ம் ஆண்டு செப்., 7ம் தேதி துவக்கப்பட்டது. இதன் 25வது ஆண்டு வெள்ளி விழா, வரும் செப்டம்பரில் கொண்டாடப்பட வேண்டும்.தற்போது துணைவேந்தராக இருக்கும், குமரகுருவின் பதவிக்காலம், வரும் 22ம் தேதியுடன் நிறைவுபெறுவதால், தம் பதவிக்காலத்திலேயே விழாவை நடத்த திட்டமிட்டார்.அதன்படி, நேற்று முன்தினம் நடைபெற்ற வெள்ளி விழாவில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், உயர்கல்வித் துறைசெயலர் அபூர்வா மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பம், முத்துக்கருப்பன், பிரபாகரன்; எம்.எல்.ஏ.,க்கள் கடம்பூர் ராஜூ, முத்துச்செல்வி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். பல்கலையின் முகப்பில் தோரணவாயில், சுந்தரனாருக்கு ஆளுயர சிலை ஆகியவற்றை, அமைச்சர் பழனியப்பன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:தமிழகத்தில், உயர்கல்விகளில் மாணவர் சேர்க்கை விகிதம், 2011ல், 18சதவீதமாக இருந்தது; இது, அதே ஆண்டில் இந்திய அளவில், 15 சதவீதமாகவும்; சர்வதேச அளவில், 23 சதவீதமாகவும்; வளர்ந்த நாடுகளில், 54 சதவீதமாகவும் இருந்தது.

42.8 சதவீதம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு இது, 38.2 சதவீதமாக உயர்ந்து, தற்போது, 42.8 சதவீதமாக உள்ளது. இந்திய அளவில், தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில் துணைவேந்தர் குமரகுரு, பதிவாளர் ஜான் டிபிரிட்டோ ஆகியோர் பங்கேற்றனர்.நெல்லை பல்கலையின் சார்பில், தமிழ்ப்பணிக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் சுந்தரனார் விருது, சீனி விஸ்வநாதன் (2014), இளையபெருமாள் (2015) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி