ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற ஜி.கே.வாசன் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2015

ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்வலியுறுத்தியுள்ளார்
.மத்திய அரசுக்கு நிகரான ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்ற தமிழக ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பதவி உயர்வு இல்லாமல், 30 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருவதாகவும் ஜி.கே.வாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.இவற்றை முன்வைத்து, வருகிற ஒன்றாம் தேதி, மூன்றாம் கட்ட போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், ஆசிரியர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசு தீர்வுகாண வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

9 comments:

  1. சிரிக்கும்போது விஞ்ஞான ‌அறிவியல்


    "என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.
    இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

    சிரிப்பைபற்றி மேலும்,

    சிரிப்பானது பல்வேறு சந்தர்ப்பங்களில் இயல்பாகவே அல்லது செயற்கையாகவே வெளிப்படக்கூடியதாகும்.
    வைத்தியதுறையினரின் ஆராய்ச்சியால் உடலில் 300 வகையான தசைகள் சிரிக்கும்போது அசைகின்றன என்பதனையும் மனமும் தேகாமும் சிரிக்கும் சந்தர்ப்பங்களில் புத்துணர்ச்சியும் , ஆரோக்கியமும் பெறுகின்ற என்பதனையும் கண்டறிந்துள்ளனர்.
    ஆய்வென்றின் படி ஓரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும் குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றன.இதிலிருந்து மனிதனுடைய வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்து கொண்டு போவதை அவதானிக்கமுடிகிறது.
    சில மேற்குலக நாடுகளில் சிரிப்பதை ஒரு பயிற்சியாக மேற்கொள்கின்றனர் ( தமிழ் திரைப்படம்- "வசூல் ராஜா MBBS" இல் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது)
    சிரிப்பு என்பது சிநேகத்திற்கான முதல் தூதுவாகவும்.
    மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமாகவும்.
    இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவதுமாக சிரிப்பு உள்ளது சிரிப்பு.
    அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்
    சிரிப்பின் வகைகள்

    அசட்டு சிரிப்பு
    ஆணவ சிரிப்பு
    ஏளனச் சிரிப்பு
    சாககச் சிரிப்பு
    நையாண்டி சிரிப்பு
    புன் சிரிப்பு (மனத்தின் மகிழ்ச்சி)
    மழலை சிரிப்பு
    நகைச்சுவை சிரிப்பு
    அச்சிதல் சிரிப்பு
    தெய்வீகச் சிரிப்பு
    புருவச் சிரிப்பு
    காதல் சிரிப்பு
    வில்லங்க சிரிப்பு
    ஏழையின் சிரிப்பு
    சிரிப்பை தெரிவிக்கும் விதங்கள்

    உதட்டின் மூலமாக சிரித்தல்
    பற்கள் தெரியும்படியாக சிரித்தல்
    பற்கள்,நாக்கு என்பன தெரியும்படியாக சத்தமாக சிரித்தல்
    சிரிப்பினால் வெளிப்படுத்தும் தகவல்கள்

    அன்பு
    மகிழ்ச்சி
    அகம்பாவம்
    செருக்கு
    இறுமாப்பு
    தற்பெருமை
    அவமதிப்பு
    புறக்கனிப்பு
    வெறுப்பு

    சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்

    வெற்றியில் சிரிப்பவன் வீரன்.
    கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.
    துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
    மகிமையில் சிரிப்பவன் மன்னன்.
    விளையாமல் சிரிப்பவன் வீணன்.
    இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.
    மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.
    மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.
    கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.
    ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.
    தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.
    நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.
    ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.
    கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.
    கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.
    இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.
    நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.
    தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.
    இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.
    குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.
    நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.
    அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.
    தற்பெருமையில் சிரிப்பவன் கோழை
    சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்.
    நிலை மறந்து சிரிப்பவள் காதலி.
    காதலால் சிரிப்பவள் மனைவி.
    அன்பால் சிரிப்பவள் அன்னை.

    சிரிப்பு என்பது மனம் சம்பந்தபட்டதாகும்,
    மனம் என்பது ஒரு விசுவாசமான சிறந்த வேலைக்காரன் என்றும் மோசமான எஜமானன் என்றும் சொல்வார்கள்.
    எனவே சிரிப்பின் போது மிகக் கவனமாக இருக்கவேண்டும் விசயம் தெரிந்தவர்கள் சிரிப்பை வைத்தே எடைபோட்டுவிடுவார்கள்.

    ReplyDelete
  2. B.T.ENGLISH. ......Mutual tranfr from MALEMARUVATHUR, KANGIPURAM .DT......TO....salem.Namakkal...dharmapuri.....erode....pls CNTACT 8012998093

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி