பள்ளிகள் அருகே ஹெல்மெட் சோதனை கூடாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2015

பள்ளிகள் அருகே ஹெல்மெட் சோதனை கூடாது

பள்ளிகளுக்கு அருகிலும், தெருக்களிலும் ஹெல்மெட் சோதனை நடத்தக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீட்டருகே இருக்கும் பள்ளியில் குழந்தைகளை விடுவதற்கு வருபவர் களும்,
அருகே இருக்கும் தெருக்களில் உள்ள கடைகளுக்கு செல்பவர்களும் சாதாரண மாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வருவார்கள். அந்த இடத்தில் போலீஸார் நின்று கொண்டுசோதனை என்ற பெயரில் தங்களை சோதனை செய்வதாக கூறி கஷ்டப்படுத்து வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.புறநகர் காவல் ஆணையராக ஜாங்கிட் இருந்தபோது, இதே போன்ற பிரச்சினை இருந்தது.அப்போது அது அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து, “பள்ளிகள், தெருக்கள் மற்றும் வீட்டின் அருகிலேயேசெல்பவர்களை பிடித்து சோதனை நடத்தக் கூடாது” என்று அவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து போலீஸார் இதுபோன்ற சோத னைகளைநிறுத்தினர். இப் போது மீண்டும் போலீஸார் பள்ளிகள் அருகே நின்று சோதனை என்ற பெயரில் பெற்றோரை கொடுமைப் படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

1 comment:

  1. இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது வரவேற்க வேண்டியதே. ஆனால் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது சிறிய கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்களுக்கு மிகவும் கடினமான ஒன்று. பேருந்து வசதி சரியாக இல்லாத கிராமத்தில், இரு சக்கர வாகனத்தில் உதவி கேட்டுதான் பயணிக்க வேண்டி உள்ளது. ஆனால் இப்போது உதவி கேட்டு பயணிக்க முடியாமல் அவதிபடுகின்றனர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி