அண்ணா பல்கலை கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் காலியில்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2015

அண்ணா பல்கலை கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் காலியில்லை

அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகளில், முக்கிய பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் இல்லை. ஆனால், பிற மாவட்ட அரசு இன்ஜி., கல்லுாரிகள் மற்றும்தனியார் கல்லுாரிகளில், ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன.இரண்டு லட்சம் இடங்களை நிரப்புவதற்கான, இன்ஜி., பொது கவுன்சிலிங், கடந்த 1ம் தேதி துவங்கியது.
முதல் நாளில் இருந்தே மாணவர்கள், அண்ணா பல்கலையின்மூன்று கல்லுாரிகளை தேர்வு செய்து வந்தனர். இதில், விரைவாக நிரம்பும் முக்கியப் பாடப்பிரிவுகளின் பட்டியலில், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் (இ.சி.இ.,), முதலிடத்தில் உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் (இ.இ.இ.,), கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் சிவில் போன்ற படிப்புகள் இடம் பெற்றுள்ளன.மூன்றாம் நாள் நிலவரப்படி, மேற்கண்ட முக்கிய பாடங்களில், அண்ணா பல்கலை கல்லுாரிகளான, கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக்கல்லுாரிகளில், பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி, மதுரை தியாகராஜர் கல்லுாரி, கோவை, சேலம் அரசு இன்ஜி., கல்லுாரி, சென்னை ஸ்ரீவெங்கடேஸ்வரா காலேஜ் ஆப் இன்ஜி., சிவசுப்ரமணிய நாடார் இன்ஜி., கல்லுாரி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, குமரகுரு இன்ஜி., கல்லுாரி உள்ளிட்ட கல்லுாரிகளில், முக்கிய பாடப்பிரிவுகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வேகமாக நிரம்பி, மிகவும் குறைந்த இடங்களே காலியாக உள்ளன.

தமிழுக்கு மவுசு இல்லை!:

அண்ணா பல்கலையின் கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகள் உள்ளிட்டவற்றிலுள்ள, மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப்பிரிவில், தமிழ்வழி படிப்புகளுக்கு, ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன.இவற்றில், ஐந்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்.பெரும்பாலான மாணவர்கள், தமிழ்வழிக்கு ஆர்வம் காட்டவில்லை.இதுகுறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கூறும் போது, 'தமிழ் வழியில் படித்தால், சான்றிதழில் தமிழ் என்று நாங்கள் குறிப்பிடுவதில்லை. ஆனாலும், மாணவர்கள் தமிழ்வழி பாடப்பிரிவை எடுக்கத் தயங்குகின்றனர்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி