ஆசிய தடகளப் போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2015

ஆசிய தடகளப் போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை

சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான தடகளப் போட்டியில், கோவையைச் சேர்ந்த மாணவரும், மாணவியும் சாதனை படைத்து நாடு திரும்பியுள்ளனர்.ஆசிய அளவிலான இரண்டாவது தடகளப் போட்டிகள் சீனாவில் கடந்த மாதம் நடைபெற்றன.
அதில், கோவையிலிருந்து சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவரான விவேகானந்தன் என்பவரும், சி.ஆர்.ஆ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி என்பவரும் பங்கேற்றனர்.

இதில் விவேகானந்தன், உயரம் தாண்டுதல் பிரிவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மும்முறை தாண்டுதலில், நந்தினி 3-வது இடம் பிடித்தார்.இருவரும் விமானம் மூலம் நேற்று முன்தினம் கோவை திரும்பினர். மாணவர் விவேகானந்தனுக்கு கோவை பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், விமானநிலைய ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) அனந்தலட்சுமி வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி