ஆசிரியர் கலந்தாய்வை முறையாக நடத்த வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2015

ஆசிரியர் கலந்தாய்வை முறையாக நடத்த வலியுறுத்தல்

ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவற்ற முறையில் முறையாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறுவனர் அ.மாயவன், பொதுச் செயலாளர் டி.கோவிந்தன், பொருளாளர் சொர்ணலதா,துணைத் தலைவர் சென்னப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் அகிலஇந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் பங்கேற்பது. வரும் ஆகஸ்டு 1-ஆம் தேதி ஜாக்டோ சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஒரு நாள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்பது.ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவுமறைவற்ற முறையில் முறையாக நடத்த வேண்டும். காலி பணியிடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெளிப்படையாகத் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி