அரசு பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு இம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2015

அரசு பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு இம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் 2,000 துப்புரவு பணியாளர்களுக்கு இம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாதம் ரூ.3,000 சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் 2012 நவம்பரில் துப்புரவாளர்கள் என்ற பெயரில் துப்புரவு பணியாளர்கள் 2,000 பேர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டனர்.


இவர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசாணை வெளியிடப்படும். இந்நிலையில் இம்மாதம் ஊதியம் பெறுவது குறித்து நேற்றுவரை எந்த உத்தரவும் இல்லை.அப்பணியாளர்கள் கூறுகையில்,“எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும் என்றாலும்அரசு வேலை என்பதால் பெரும்பாலும் டிகிரி முடித்தவர்களே இதில் உள்ளனர்.இன்றையபொருளாதார சூழ்நிலையில் மாத ஊதியம் ரூ.3,000 என்பது மிக மிக குறைவு. குடும்பத்தினருடன் கஷ்டப்பட்டு வருகிறோம்.

அரசாணை எதுவும் வராததால் இம்மாத ஊதியம் அடுத்த மாத துவக்கத்தில் எங்களுக்கு கிடைக்குமா என்ற கலக்கத்தில் உள்ளோம்.மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்டால் சென்னை பள்ளிக்கல்வித்துறையில் முறையிடகூறுகின்றனர். எங்களது மாத ஊதியத்தை உயர்த்தி அது முறையாக கிடைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்,”என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி