ஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தருவார்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2015

ஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தருவார்!

மாணவர்களுக்கு இருப்பிட, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை, பள்ளிகள் மூலமேவாங்கித் தர, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய கல்வியாண்டில்,6ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ,
மாணவியருக்கு பல திட்டங்களுக்காக, ஜாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்றிதழ்கேட்கப்படுகின்றன.கல்வி உதவித் தொகை, இலவசத் திட்டங்கள் போன்றவற்றை வழங்க, இந்த சான்றிதழ்கள் அவசியம். ஆனால், இந்த சான்றிதழ்களை, 'ஆன் - லைன்' மூலம் பெறுவதில் தாமதம்ஏற்படுகிறது. எனவே, பள்ளிகள் மூலமே சான்றிதழ் வாங்கித் தர, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

எல்லாப் பள்ளிகளும், மாணவ, மாணவியரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை, தனித்தனி விண்ணப்பங்களில் பூர்த்தி செய்து, உரிய முகவரி ஆவணங்களுடன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வரும், 31ம் தேதிக்குள், தமிழக அரசின் பொது இ - சேவைத் துறை மூலம் சான்றிதழ்களை பெற்றுத் தர, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி