'ஜாக்டோ' அமைப்பை தடை செய்ய தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2015

'ஜாக்டோ' அமைப்பை தடை செய்ய தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை கோரிக்கை

ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பை, தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, கோரிக்கை விடுத்துள்ளது.இதன் மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ், முதல்வர் அலுவலகத்தில், கொடுத்துள்ள மனு:அரசுப் பணியில் இல்லாதவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களின் சங்க விவகாரங்களில், தொடர்பு வைத்திருக்கக் கூடாது.


தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர்மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் முத்துச்சாமி மற்றும் கவுரவ பொதுச்செயலர் அணணாமலை ஆகியோர், ஆசிரியர் சங்கங்களின் தலைமை நிர்வாகிகளாக, செயல்படுகின்றனர்.மேலும், அவர்கள் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராகவும், தி.மு.க.,வின்அறிவிக்கப்படாத கொள்கை பரப்பு செயலர்களாகவும்இருக்கின்றனர்.மூன்றுபேரும், தி.மு.க.,வினரின் துாண்டுதல்பேரில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை,தமிழகஅரசுக்கு எதிராக, போராடத் துாண்டி விடுகின்றனர்.

கடந்த, நான்கு ஆண்டு களில் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு சலுகைகள் வழங்கியதற்கு, மூன்று பேரும், நன்றி தெரிவிக்கவில்லை. இப்போது, மூன்று பேரும், சில ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, 'ஜாக்டோ' என்னும் அமைப்பை உருவாக்கி, தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த, ஆசிரியர்களை துாண்டி வருகின்றனர். பள்ளிக்குச் சென்று, அழைப்புவிடுக்கின்றனர்.எனவே, அரசுப் பணியில் இல்லாதவர்கள் தலைமையில் செயல்படும், ஆசிரியர்கள் சங்கங்களின், அங்கீகாரத்தை, உடனே ரத்து செய்ய வேண்டும். இவர்கள் தலைமையில் செயல்படும், 'ஜாக்டோ' அமைப்பை, தடை செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. முறையான மனு. விரைவில் நடவடிக்கைஎஎடுத்தால் நல்லது

    ReplyDelete
  2. ஆசிரியர் கூட்டங்கள் உண்ணாவிரதம் எல்லாமே திமுக கட்சிக் கூட்டம் போல் இருக்கும். சரமாரியாக அரசை சாடுவார்கள். கோரிக்கை வைக்கும் முறையில் ஒரு நாகரிகம் வேண்டாமா நாம் ஆசிரிர்களா கட்சித் தொண்டர்களா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி