புத்தம் புதிய பூமி: கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2015

புத்தம் புதிய பூமி: கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்

பூமி போன்று இன்னொரு கிரகம் இருக்கிறதா என்று நீண்ட காலமாக நாசா ஆய்வு நடத்தி வந்த நிலையில் தற்போது இன்னொரு பூமியை கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வரும் கெப்ளர் தொலைநோக்கியானது, இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கெப்ளர் தொலைநோக்கி கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாகவும்.

இதுகுறித்த ஆய்வின் கடைசிக் கட்டத்தில் விஞ்ஞானிகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.இதற்கு கெப்ளர் 186எப் எனறு பெயரிடப்பட்டது. இது பூமியலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நம்மைப் போலவே உள்ள ஒரு கிரகமாக இது கருதப்படுகிறது.பூமியை விட பெரியது... அதேபோல இந்த ஆண்டு ஜனவரியில் கெப்ளர் 438 பி, 442 பி என மேலும் இரு கிரகங்களை கெப்ளர் கண்டுபிடித்தது.

இதில் பி கிரகமானது பூமியை விட 12 சதவீதம் பெரிதாகும். 442 பி கிரகமானது 33 சதவீதம் பெரிதாகும். ஜூலை மாதத்தில் கெப்ளர் அதே நட்சத்திரத்தை 4 கிரகங்கள் சுற்றி வருவதாக கண்டுபிடித்தது. அந்த நட்சத்திரத்திற்கு கெப்ளர் 444 என பெயரிடப்பட்டுள்ளது.இன்று நடைபெறவுள்ள செய்தியாளர்கள் கூட்டத்தில் புதிய பூமி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி