முந்தைய ஆண்டு அடிப்படையில் பணிநிரவல்: ஆசிரியர்கள் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2015

முந்தைய ஆண்டு அடிப்படையில் பணிநிரவல்: ஆசிரியர்கள் எதிர்ப்பு

முந்தைய ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரிஆசிரியர்களை பணிநிரவல் செய்ய ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆக., 1 மாணவர் வருகை அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கானபணியிடங்கள் கணக்கிடப்படுகின்றன.


இந்த பணியிடங்கள் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் மற்ற பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை மாறுபடும்போது முந்தைய ஆண்டு அடிப்படையில் பணியிடங்களை நிர்ணயம் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இதனால் அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் குறைவான ஆசிரியர்களும், குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களும் பணிபுரியும் நிலை உள்ளது. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் நடப்பாண்டு மாணவர்கள் வருகை அடிப்படையில் பணிநிரவல் செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அமல்ராஜ் கூறியதாவது: சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் சென்ற ஆண்டு அடிப்படையில் பணி நிரவல் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும், என்றார்.

1 comment:

  1. B.T.english.....Mutual tranfr from MALEMARUVATHUR, KANGIPURAM DT......TO....salem.Namakkal...dharmapuri.....erode....pls CNTACT 8012998093

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி