ஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2015

ஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு

இடமாறுதல், 'கவுன்சிலிங்' விதிமுறை களுக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கவுன்சிலிங் தேதி அறிவிப்பது, திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.


இந்த முறை, கவுன்சிலிங் குறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால், பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில், தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, கவுன்சிலிங்குக்கான புதிய விதிமுறைகளை, 10 நாட்களுக்கு முன், தமிழக அரசு வெளியிட்டது. அதில், 'ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்; அதற்கு முன் நிர்வாக நலன் அடிப்படையில் மட்டுமே இடமாற்றம் நடக்கும்' என, தெரிவிக்கப்பட்டது. 'இந்த விதிமுறைகள் ஊழலுக்கு வழிவகுக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.'விதிமுறைகளை மாற்ற வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பின. சில சங்கங்கள் சார்பில், போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், கவுன்சிலிங் விதிமுறைகளில், சில மாற்றங்கள் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுன்சிலிங்குறித்த தேதி அறிவிப்பு, நேற்று வெளியாக இருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.கவுன்சிலிங் விதிமுறைகளில், மாற்றங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். பள்ளிகளின் காலியிட விவரங்கள் இன்னும் முழுமையாக சேகரிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேல்,ஒரே இடத்தில் பணிபுரிவோருக்கு, கட்டாய மாறுதல் இருக்காது என்ற விதி இடம் பெற வாய்ப்புள்ளது கல்வித்துறை அதிகாரிகள்..

ஆதிதிராவிடர் பள்ளி பொதுமாறுதல்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்;முதுகலை பட்டதாரி ஆசிரியர்; கணினி ஆசிரியர்; உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு, இந்த கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கவுன்சிலிங், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. அதேபோல, பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடை நிலை ஆசிரியர், உயர் கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங், வரும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. அந்தந்தமாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்திடம், இடமாறுதல் கோரி, 'ஆன் -லைன்' மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டும், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

9 comments:

  1. B.T.english.....Mutual tranfr from MALEMARUVATHUR, KANGIPURAM DT......TO....salem.Namakkal...dharmapuri.....erode....pls CNTACT 8012998093

    ReplyDelete
    Replies
    1. itha case kku mudivu vendum

      MADRAS HIGH COURT - MADURAI BENCH
      CASE STATUS INFORMATION SYSTEM

      Case Status : Pending

      Status of WRIT PETITION(MD) 16547 of 2014

      S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU

      Pet's Adv. : M/S.V.SASIKUMAR

      Res's Adv. : G.A.,TAKES NOTICE

      Last Listed On : 8/7/2015

      Next Date of Hearing : Wednesday, July 08, 2015

      Category : Service

      CONNECTED APPLICATION (S)

      MP(MD) 4 of 2014


      CONNECTED MATTER (S)

      No Connected Cases.


      Case Updated on: Tuesday, July 14, 2015








      ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது முடிவுக்கு வருகிறது?


      இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?

      meethi 30 % sc sca kondu nirappida vendum.

      ithu thevai illatha valakku .

      sc school il sc kondu nirappukirarakal

      bc school il bc kondu nirappukirarakal

      ithukku oru case thevaiya?

      உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்கள்,தேர்வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

      Delete
  2. Please clarify whether the computer science teachers are eligible for transfer or not.

    ReplyDelete
  3. Please clarify whether the computer science teachers are eligible for transfer or not.

    ReplyDelete
  4. Please clarify whether the computer science teachers are eligible for transfer or not.

    ReplyDelete
  5. I AM BTMATHS IN KARUR. I WANT MUTUAL TRANSFER TO DINDIGUL / TRICHY. CON - 7708982207

    ReplyDelete
  6. PHYSICAL DIRECTOR AND RESERVE POST FOR PG 2013-2014, 2014-2015SELETED CANDIDATE ASSMBLED AT DBI ON AUGUEST 3RD 2015AT 10 O'CLOCK 9942299885

    ReplyDelete
  7. Transfer Ku epdi apply pandrathu

    ReplyDelete
  8. I am working as a Physical Education Teacher in Madurai dt.If anybody willing for mutual tranfer in Coimbatore dt,and Theni dt to Madurai dt,contact me.My mobile numbers are 9843705666 and 9578487233.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி