பள்ளி வாகனங்கள் பராமரிப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2015

பள்ளி வாகனங்கள் பராமரிப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்கடந்த 2014-ஆம் ஆண்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் 1,101 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.


இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும். முழுத் தகுதி பெற்ற, அனுபவம் வாய்ந்த ஓட்டுநர், நடத்துநர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.ஓட்டுநர் விடுப்பில் செல்லும்போது, ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர் அல்லது கிளீனர் போன்றவர்களை பள்ளி வாகனத்தை ஓட்ட அனுமதிக்கக் கூடாது.போக்குவரத்துத் துறையின் உத்தரவுப்படி, பள்ளி வாகனப் பராமரிப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளி வாகனத்தை இயக்கும்போது ஓட்டுநர்செல்லிடப்பேசியில் பேசுவது, தண்ணீர் அருந்துவது, குழந்தைகளுடன் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

போக்குவரத்து விதிகளை மீறி பள்ளி வாகனத்தை இயக்கினால் புகார் தெரிவிக்க வசதியாக, பள்ளி முதல்வர், பள்ளி நிர்வாக அலுவலர் ஆகியோரின் செல்லிடப்பேசிஎண்களை பள்ளி வாகனத்தில் எழுதிவைக்க வேண்டும்.பாலம், நீர்நிலைகளைக் கடந்து செல்லும்போதும், பிற வாகனங்களை முந்திச் செல்லும்போதும் ஓட்டுநர் மிகவும் கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்த வேண்டும்.இந்த அறிவுரைகளை அனைத்து தனியார் பள்ளி, சுயநிதிப் பள்ளிகளுக்கும் அனுப்பவேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி