அரசு மானியங்கள் பெற ஆதார் கட்டாயம் விவசாயிகளுக்கு வேளாண் துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2015

அரசு மானியங்கள் பெற ஆதார் கட்டாயம் விவசாயிகளுக்கு வேளாண் துறை உத்தரவு

மாநிலம் முழுவதும், ஒரு கோடிக்கும் மேலான விவசாயிகள் உள்ளனர். இதில், 81 லட்சம் பேருக்கு,ஒருங்கிணைந்த விவசாய கையேடு வழங்க திட்டமிட்டு, 65 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.கையேடு பெற்ற விவசாயிகள் மூலம் உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை பொருட்கள் உற்பத்தியை அதிகரித்து, இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, ஆண்டுதோறும் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுவருகிறது.விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் விதைகள், உரங்கள், நுாண்ணுாட்ட சத்துக்கள்உள்ளிட்ட இடுபொருட்கள்; வேளாண் கருவிகளும், இயந்திரங்களும் மானிய விலையில்வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான நிதியை, மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும்வழங்குகிறது.

இந்த நிலையில், மானிய திட்டங்களில் பலன் பெற விரும்பும் விவசாயிகள், தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.அத்துடன், விவசாயிகளிடமும் நேரடியாக அறிவுறுத்தப்படுவதோடு, குறுஞ்செய்திகளையும் அனுப்பி வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி