சென்னை கணித அறிவியல் நிலையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2015

சென்னை கணித அறிவியல் நிலையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி



இந்திய அரசின் அணுசக்தி துறையின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் (The Institute of Mathematical Science)  ஒரு வருட Administrative Trainees பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 2013-14 மற்றும் 2014-15-ம் கல்வி ஆண்டுகளில் படித்து முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 07
பணி: Administrative Trainees
உதவித்தொகை: மாதம் ரூ.10,000

காலியிடங்கள்: 05
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Computer Data Processing & Operation மற்றும் Office Tools (MS Office & E-mail) களில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 01
தகுதி: பி.காம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Tally, Computer Data Processing & Operation மற்றும் Office Tools (MS-Office & E-mail) களில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 01
தகுதி: முதல் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எஸ்சி அல்லது பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Software மற்றும் Hardware-களில் பராமரிப்பு பற்றிய திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar,
The Institute of Mathematical Sciences,
4th Cross Road, CIT Campus,
Taramani, Chennai - 600113.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.imsc.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி