அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி:ஆசிரியர்கள் பங்கேற்பு அவசியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2015

அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி:ஆசிரியர்கள் பங்கேற்பு அவசியம்

அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சியில் 100 சதவீத ஆசிரியர்களும் பங்கேற்பதை கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடக்க, நடு, உயர், மேல்நிலைப்பள்ளியில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டம்சார்பில் கற்றல் கற்பித்தல் பயிற்சி தரப்படுகிறது.


கடந்தாண்டு 10 நாட்கள் பயிற்சி பெற்றனர்.நடப்பாண்டு 17 நாட்கள் என நிர்ணயித்துள்ளனர். அனைத்து ஆசிரியர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கவேண்டும். இதில், 100 சதவீத ஆசிரியர்களும் பங்கேற்பதை சி.இ.ஓ., மாவட்ட கல்வி அலுவலர் உறுதி செய்யவேண்டும்.பெரும்பாலான பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, உயர், நடுநிலை பள்ளி பட்டதாரி, இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.ஒரு சில பட்டதாரி ஆசிரியர்கள் 10ம் வகுப்பிற்கு பாடம் எடுப்பதாகவும், பிளஸ் 2விற்கு முதுநிலை ஆசிரியர்கள் பாடம் எடுப்பதாக கூறி பயிற்சியை புறக்கணிக்கின்றனர். கல்வித்துறையினர் இந்த உத்தரவால் புறக்கணிப்பு ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஆசிரியர் ஒருவர் கூறும்போது; கடந்தாண்டு நடந்த பயிற்சியில் ஆசிரியர்கள் பெரும்பாலும் பங்கேற்கவில்லை. பயிற்சிக்காக ஒதுக்கிய நிதி திரும்ப சென்றது.இதை தவிர்க்க அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்க கூறியுள்ளனர். பயிற்சியில் நவீன உபகரணம் மூலம் செய்முறை விளக்கம் அளிப்பதில்லை. சாதாரண கூட்டம் போல் தான் பயிற்சி அளிக்கின்றனர். தரமான பயிற்சி அளிப்பதை உறுதி செய்யவேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி