இரண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு பல் மருத்துவ கவுன்சில் அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2015

இரண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு பல் மருத்துவ கவுன்சில் அனுமதி

பல் மருத்துவ, 'டிப்ளமோ' படிப்புகள் இரண்டுக்கு, இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.தமிழகத்தில், பல் மருத்துவம் சார்ந்த, 24 படிப்புகள் உள்ளன. இதில், 'டென்டல் மெக்கானிக்கல், டென்டல் ஹைஜீனிஸ்ட்' என்ற இரு, டிப்ள
மோ படிப்புகளுக்கு, அனுமதி கிடைக்காமல் இருந்தது. தற்போது, இந்திய பல் மருத்துவக் கவுன்சில் உரிய அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறியதாவது:பல் மருத்துவம் சார்ந்த மாணவர் சேர்க்கை, பதிவு முறை, பயிற்சி முறை, பாடத்திட்டம் வகுத்தல், தேர்வு முறை, சான்று வழங்கல் என, அனைத்தும் ஒரே சீராக இருக்க, மாநில பல் மருத்துவக் கவுன்சில் அமைத்து, செயல்படுத்தி வருகிறோம் என, விளக்கம் அளித்தோம்.இதையேற்று, இரண்டு டிப்ளமோ படிப்புகளுக்கும், இந்திய பல் மருத்துவக் கவுன்சில்அனுமதி அளித்துள்ளது. அனைத்து நடைமுறைகளும் சீராக இருக்க, தமிழகம் போன்று, மாநில பல் மருத்துவக் கவுன்சில் உருவாக்க மற்ற மாநிலங்களுக்கும்பரிந்துரைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி