'ப்ளே ஸ்கூல்' திருத்திய விதிமுறைகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2015

'ப்ளே ஸ்கூல்' திருத்திய விதிமுறைகள் வெளியீடு

ப்ளே ஸ்கூல்' நடத்துவதற்கான, திருத்திய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுஉள்ளது.தமிழகத்தில், ப்ளே ஸ்கூல் புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது. இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக, தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்தது.


இது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில், புதிதாக திருத்திய விதிமுறைகளை, அரசு அறிவித்துள்ளது.

முன், ப்ளே ஸ்கூல் விதிமுறையில், 'ப்ரி கே.ஜி.,' வகுப்பு மட்டும் சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது, புதிதாக, எல்.கே.ஜி., -யு.கே.ஜி., நடத்தவும், அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.மேலும்,
*ப்ளே ஸ்கூல் வகுப்பறைகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
*குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.
*அறைகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.
*மாணவர், 15 பேருக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.
*தகுதி வாய்ந்த ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும்.
*ஒவ்வொரு வகுப்பிற்கும், இரண்டு வழிகள் இருக்க வேண்டும்.
*வகுப்பறைகள் தரைதளத்தில் மட்டும் இருக்க வேண்டும்.

இவ்வாறு, அரசு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி