கோவை வேளாண்மைப் பல்கலை.யில் முதுநிலைப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2015

கோவை வேளாண்மைப் பல்கலை.யில் முதுநிலைப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது. இப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விரிவாக்கம், மண்ணியல், பூச்சியியல், வேளாண் பொறியியல் உள்ளிட்ட 33 முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,
2015-16 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 3-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகி இருந்தது. தேர்வுக்குஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாளான ஜூலை 20-ஆம் தேதி வரையிலும் 1,684 மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்.

இவர்களில் 540 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கான நுழைவுத் தேர்வு பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 28-ஆம் தேதி வெளியாகும். இதையடுத்து சேர்க்கை நடைமுறைகள் தொடங்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி