முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு எதிரொலி : ஓவியம், தையல் பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2015

முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு எதிரொலி : ஓவியம், தையல் பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைப்பு

ஓவியம், தையல் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை தொடங்கி 3 நாட்களில்பாடத்திட்டம் தயாரிக்க உள்ளது. ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு இதுவரை சரியான பாடத்திட்டம் இல்லை. இது குறித்து மேற்கண்ட பாட ஆசிரியர்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தனர்.


அதன் பேரில் மேற்கண்ட பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் இதற்கான பாடத்திட்டம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு அமைத்துள்ள குழுவில் இசைப் பாடத்துக்கு 5, ஓவியப்பாடத்துக்கு 8, தையல் பாடத்துக்கு 7, உடற்கல்வி பாடத்துக்கு 5 பேர் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவினர் நாளை முதல் 30ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐவளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் மேலா ண்மை பயி ற்சி நிறுவன ஆய்வுக் கூடத்தில் பாடத்திட் ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி