TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2015

TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்?

மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதன்படி இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.) கொண்டு வந்தது.


2009-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010-ல் அமல் படுத்தப்பட்டு, 2011-ல் விதி முறைகள் வெளியிடப்பட்டன.

மேற்கண்ட விதிமுறைகளின்படி ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆசிரி யர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் 2012-ல் ஜூலை மற்றும்அக்டோபரி லும், 2013-ல் ஆகஸ்டிலும் தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலமாக அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு முடிய இன்னும் 5 மாதங்களே உள்ளன. எனவே, இந்த ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்படுமா? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பிஎட் பட்டதாரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் தளர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தேர்வு எப்போது நடைபெறும் எனத் தெரியவில்லை” என்று தெரிவித்தனர்.

16 comments:

  1. when is school lab asst result

    ReplyDelete
  2. Eppa etha airtcal athukuka sir potureka

    ReplyDelete
    Replies
    1. தங்களின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டவே...

      Delete
  3. Pg trb அடுத்த மாதம் அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறதா sir?

    ReplyDelete
  4. தெரியவில்லை என்று சொல்வதற்கு ஒரு பதிவா!!!!அருமை

    ReplyDelete
  5. FLASH NEWS! for PG TRB reserve position selected candidates and PHYSICAL DIRECTOR selected candidates we all are will be assemble at DPI COMPLEX ( CHENNAI)on 31/07/2015 (9:30am) for give REQUEST LETTER to put our appointment soonly (ALL THE CADIDATES WILL BE MUST)!!!!!!! contact no: 9942299885 Balathandayutham

    ReplyDelete
  6. Pg trb வருவதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? தெரிந்தவர்கள் தங்களின் மதிப்புமிக்க கருத்தினை பதிவிடவும்.

    ReplyDelete
  7. Pg trb வருவதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? தெரிந்தவர்கள் தங்களின் மதிப்புமிக்க கருத்தினை பதிவிடவும்.

    ReplyDelete
  8. sir comp.science suject ku any news unda...pls slunga school elam work num comp. than

    for.ex e-mail la lettet sendly, online scholorship,bus pass,nomial roll preparation etc..elam

    comp.than bt oru hr.sec school comp.sci staff ila..ena government ethu

    ReplyDelete
  9. பள்ளி ஆய்வக முடிவு எப்போது? அதற்கான முயற்சி எடுக்கலாமே

    ReplyDelete
  10. 2013 Tet exam second list erukka pls solungu

    ReplyDelete
  11. 2013 Tet exam second list erukka pls solungu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி