செப்டம்பர் 2ல் வேலைநிறுத்தம்ரேஷன் கடைகள் திறந்திருக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2015

செப்டம்பர் 2ல் வேலைநிறுத்தம்ரேஷன் கடைகள் திறந்திருக்குமா?

அடுத்த மாதம், 2ம் தேதி நடைபெறும், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களும் பங்கேற்பதால், கடை திறப்பதில் சிக்கல்ஏற்பட்டு உள்ளது.


பல்வேறு சங்கங்களும் ஒன்றிணைந்து, பல கோரிக்கைகளை வலியுறுத்தி,வரும், 2ம் தேதி, அகில இந்திய அளவில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்தப் போராட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்களும் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:அரசு நிறுவனங்களில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டுமே குறைந்த சம்பளம் தரப்படுகிறது. இதை உயர்த்தும்படி, பலமுறை கோரிக்கைவிடுத்தும் பலனில்லை. தற்போது, சட்டசபை கூட்டம் நடக்கிறது. அதனால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 2ம் தேதி, ரேஷன் கடைகளை பூட்டி விட்டு, நாங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விடுப்பு எடுப்பது ஊழியர்கள் விருப்பம். மாதத்தின் முதல் வாரத்தில், அதிகம் பேர் ரேஷன் கடைகளுக்கு வருவர் என்பதால், போராட்டத்தில் பங்கேற்காதகூட்டுறவு சங்க பிற ஊழியர்கள் மூலம், 2ம் தேதி, வழக்கம் போல ரேஷன் கடைகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி