4 மாதங்களாக காலியாக கிடக்கும் 70 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள்: பள்ளி நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2015

4 மாதங்களாக காலியாக கிடக்கும் 70 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள்: பள்ளி நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் 70 மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான பதவிகள் 4 மாதங்களாக காலியாக கிடப்பதால், பள்ளி நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மாவட்ட அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் பள்ளிகளை நிர்வாகம் செய்வதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 125 மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான பதவிகளில்70 இடங்கள் கடந்த 4 மாதங்களாக காலியாக கிடக்கின்றன.


திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்களும், கிருஷ்ணகிரி, திருச்சி, லால்குடி, அறந்தாங்கி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, பரமக்குடி போன்ற கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அதிகாரி பணி யிடங்களும், தஞ்சாவூர், புதுக் கோட்டை, காஞ்சிபுரம், கோவை மாவட்டங்களில் மெட்ரிகுலே ஷன் பள்ளி ஆய்வாளர் பணி யிடங்களும் காலியாகஉள்ளன.மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கு (டி.இ.ஓ.) காலியாக உள்ள இடங்களில் அரசு மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதால்அவர்களால் ஒரேநேரத்தில் கல்வி நிர்வாக பணிகளையும், பள்ளி நிர்வாகப் பணிகளையும் சரியாக கையாள முடியவில்லை.


இதனால், பள்ளி நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.டி.இ.ஓ. பணியைப் பொறுத்த வரையில் 25 சதவீத இடங்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகின்றன.எஞ்சிய 75 சதவீத இடங்களில் 40 சதவீதம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டும், மீதமுள்ள 30 சதவீதம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டும் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியல் 4 மாதங் களாக தயார் நிலையில் இருந்தும் இன்னும் டிஇஓ காலி யிடங்கள் நிரப்பப்படவில்லையே என்பதுஅரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஆதங்கம்.பள்ளி நிர்வாகப் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறும்போது, “டிஇஓ கூடுதல் பொறுப்பு வகிக்கும் தலைமை ஆசிரியர்களால் பள்ளி நிர்வாகத்தில் சரிவர கவனம் செலுத்த முடிவதில்லை.


இதனால் பள்ளி நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதும் சிரமமாக இருக்கிறது.எனவே, பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகள் ஒழுங்காக நடைபெறவும், நிர்வாகப் பணிகள் தொய்வு ஏற்படாமல் சீராக நடைபெறவும் டிஇஓ காலியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி