ஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2015

ஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ஆம் தேதி மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.கடந்த ஆண்டில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதியன்று பள்ளி வகுப்புகள் முடிந்த பிறகு மோடி உரை நிகழ்த்தினார்.


இதனால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளானதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த ஆண்டில் மோடி உரை நிகழ்த்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:அடுத்த மாதம் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று விடுமுறை நாளாகும். அன்று கோகுலாஷ்டமியும் வருகிறது. எனவே, ஆசிரியர் தினத்துக்கு முந்தைய நாளான, செப்டம்பர் 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு பிரதமர் உரை நிகழ்த்துவதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடுவார். இது ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி