பள்ளி மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கடன் அட்டை: நிதிஷ்குமார் அதிரடி திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2015

பள்ளி மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கடன் அட்டை: நிதிஷ்குமார் அதிரடி திட்டம்

பள்ளி படிப்பை முடித்த அனைவருக்கும் 4 லட்சம் ரூபாய் பெரும் வகையில் கடன் அட்டை வழங்கப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.பிகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.


கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் பாட்னாவில் 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணத்தை முதல்வர் நிதிஷ்குமார் நேற்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தாம் மீண்டு ஆட்சி அமைத்தால் அரசு வேலைகளில் மகளிருக்கு 35 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.


மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி செலவுக்காக 4 லட்சம் ரூபாய் வரை பேரும் வகையில் 3 சதவிகித அரசு மானியத்துடன் கூடிய கடன் அட்டைகள் வழங்கப்படும் என்று கூறினார்.மேலும், மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இலவச வைபை வசதி, இளம் தொழில் முனைவோர்க்கு நிதி உதவி வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி