தமிழகத்தில் ஹிந்துக்கள், முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2015

தமிழகத்தில் ஹிந்துக்கள், முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு?

தமிழகத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 87.58 சதவீதமாகவும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 6.12 சதவீதமாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.86 சதவீதமாகவும் உள்ளது.


மாநிலம் முழுவதும் 99,702 பெண்கள் உள்பட 1 லட்சத்து 88,586 பேர் தங்களது மதங்களைக் குறிப்பிடப்படவில்லை. கடந்த 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மதவாரியாக மக்கள் தொகை விவரங்கள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.


தேசிய அளவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஹிந்துக்களின் எண்ணிக்கை79.8 சதவீதமாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை 14.2 சதவீதமாகவும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.3 சதவீதமாகவும், சீக்கியர்களின் எண்ணிக்கை 1.7சதவீதமாகவும் உள்ளது.


தமிழக அளவிலான புள்ளி விவரம் வருமாறு:


தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 ஆகும்.இவர்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 6 கோடியே 31 லட்சத்து 88 ஆயிரத்து 168 (87.58 சதவீதம்) ஆக உள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 29 ஆயிரத்து 479 (5.86 சதவீதம்) ஆக உள்ளது. கிறிஸ்தவர்களின்எண்ணிக்கை 44 லட்சத்து 18 ஆயிரத்து 331 (6.12 சதவீதம்) ஆக உள்ளது.சமண மதத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 265 ஆக உள்ளது.


சீக்கியர்களின் எண்ணிக்கை 14,601 ஆகவும், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 11,186 ஆகவும் உள்ளது. பிற மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 7,414 ஆக உள்ளது. கடந்த 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 88.1 சதவீதமாகவும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 6.06 சதவீதமாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.56 சதவீதமாகவும் இருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி