உங்களை தேடி வருகிறது இசை, ஓவிய கல்வி மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2015

உங்களை தேடி வருகிறது இசை, ஓவிய கல்வி மையம்

'தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் கல்வி அமைப்புகள் மற்றும் சபாக்கள் மூலம், 250 இடங்களில் நேரடி இசை, ஓவிய கல்வி மையங்கள் அமைக்கப்படும்' என, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலை அறிவித்துள்ளது.


இப்பல்கலை, சென்னையில் செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில், ஐந்து இசை கல்லுாரிகள், மூன்று கவின்கலைக் கல்லுாரிகள் மற்றும், 17 இசை பள்ளிகள் உள்ளன. தற்போது முதல் முறையாக, பல்கலைக்கு வெளியே படிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன.இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் வீணை காயத்ரி அளித்த பேட்டி:இசை மற்றும் கவின்கலைப் படிப்புகள், சென்னை உட்பட முக்கிய நகரங்களில் மட்டுமே நடத்தப்படுவதால், கிராம மக்கள் படிக்க முடியவில்லை. எனவே, பல்கலையின் பாடத்திட்டப்படி, தமிழகம் முழுவதும், தனியார் மற்றும் அரசு கல்வி அமைப்புகளின் ஒத்துழைப்புடன், 250 கல்வி மையங்கள், பல்கலைக்கு வெளியே அமைக்கப்படும். இதில், ஓராண்டு கால டிப்ளமோ மற்றும் ஆறு மாத கால சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.டிப்ளமோ படிக்க, 8ம் வகுப்பு சான்றிதழ் படிப்புக்கு, 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும். இந்த படிப்புக்கு, பல்கலையின் நேரடி சான்றிதழ் வழங்கப்படும். அக்டோபர் முதல் மாணவர் சேர்க்கை நடக்கும்.வெளி வளாக படிப்பு மையங்களை நடத்த, தனியார்கல்வி அமைப்புகள், அறக்கட்டளைகள், இசை சபாக்கள், இசை குழுமங்கள் எங்களை அணுகலாம். அந்தந்தப் பகுதிகளில், எந்தவித பாடப்பிரிவு தேவைப்படுகிறதோ, அதற்கேற்ற பிரிவுகளை மட்டும் கல்வி மையங்களில் தேர்வு செய்யலாம். சம்பந்தப்பட்ட அமைப்புகளே, ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இல்லை யெனில் பல்கலை சார்பில் ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்.இசை, கலைப் படிப்பு மையங்களை துவங்க ஆர்வமுள்ளவர்கள், பல்கலைப் பதிவாளர் அல்லது அலுவலகத்தை அணுகலாம்.

மேலும் விவரங்களை பெற, offcampus.tnmfau@gmail.com என்ற முகவரிக்குஇ - மெயில் அனுப்பலாம். கூடுதல் விவரங்களை, www.tnmfau.inஎன்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.என்னென்ன படிப்புகள்வாத்திய இசை, வீணை, பரதம், மேற்கத்திய மற்றும் நாட்டுப்புற நடனம், ஓவியம், கைவினை கலை, பேஷன் டிசைனிங், முடி அலங்காரம், புகைப்படக்கலை, திரை ஒளிப்பதிவு பயிற்சி, அரங்க வடிவமைப்பு, நகை தயாரிப்பு, மருதாணியிடுதல் மற்றும் டாட்டூ வரைதல் மற்றும் குரல்வளக் கலை உள்ளிட்ட படிப்புகள், இந்த மையங்களில் கற்றுத் தரப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி