சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இடஒதுக்கீடு குறித்து விவாதம்:மாணவர்களுக்கு அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2015

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இடஒதுக்கீடு குறித்து விவாதம்:மாணவர்களுக்கு அரசு உத்தரவு

அம்பேத்கரின், 125வது பிறந்த நாளை முன்னிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 'மாதிரி பார்லிமென்ட்' நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டு உள்ளது. அப்போது, கீழ்கண்ட தலைப்புகளில், மாணவர்கள் விவாதம் நடத்த வேண்டும் எனவும், அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


வழங்கப்பட்டுள்ள தலைப்புகள்:பேச்சுரிமை முறையாக அமலாகி இருக்கிறதா?பழங்குடியினரின் கலாசார மரபுகளை பாதுகாக்கவும், வாழ்க்கை முறையை உயர்த்தவும், அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியா?கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில், அனைத்து மக்களுக்கும் சமமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா?மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, இன்னும்கூடுதலாக ஊக்கத்தொகை வழங்க வேண்டுமா?சட்டசபை மற்றும் பார்லிமென்டில், எழுத்தளவில் மட்டுமே பெண்களுக்கான உரிமைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதா?தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், குழந்தைகளை தவறான வழிக்கு திசை திருப்பும்தகவல்களை, எப்படி கட்டுப்படுத்துவது?நிலம் இல்லாத, விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும்?நுகர்வு திறன் அதிகரிப்பால், மக்களின் வாழ்க்கை முறை மற்றும் முன்னேற்றத்தில், தவறான எதிர்விளைவு ஏற்படுகிறதா?இந்த தலைப்புகளில், மாணவர்கள் நடத்தும் விவாதங்களை தொகுத்து, சி.பி.எஸ்.இ., தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என, பள்ளிகளுக்குஉத்தரவிடப்பட்டு உள்ளது.

2 comments:

  1. good and well imprument of sdudent skill

    ReplyDelete
  2. good and well imprument of sdudent skill

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி