வங்கி போட்டி தேர்வுக்கு சென்னையில் இலவச பயற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2015

வங்கி போட்டி தேர்வுக்கு சென்னையில் இலவச பயற்சி

வங்கிப்பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் சேர ஆதிதிராவிட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.


டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும் அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து, ஆதிதிராவிட மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்கு வேலைவாய்ப்புகளுக் கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் 22 மையங்களில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த இலவச பயிற்சி வகுப்பு களில், கல்லூரி பேராசிரியர்கள், இன்சூரன்ஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள், மாண வர்களுக்கு பயிற்சி அளித்துவரு கின்றனர். இந்நிலையில், 10,000 வங்கி காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதையடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 3 மாத காலத்துக்கு வாராந்திர இலவச வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.


சென்னையில் பாரிமுனை அருகில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயில் அக்ரஹாரத்தில் (அரண்மனைக்கார தெரு) உள்ள பயிற்சி மையத்தில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடைபெற இருக்கிறது.விருப்பம் உள்ளவர்கள் இந்த இலவச வகுப்பில் சேர 9444641712, 9444030745, 9444982364, 9444928162, 9444241696 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என, பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி