"பள்ளிகளில் சமையல் பாத்திரங்களை சுகாதாரமாக பராமரிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2015

"பள்ளிகளில் சமையல் பாத்திரங்களை சுகாதாரமாக பராமரிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்'

பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சமையல் பாத்திரங்களை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.க. பரமத்தியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ச. ஜெயந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.


அப்போது க.பரமத்தி ஊராட்சியில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்ட அவர், க.பரமத்தி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை ஆய்வு செய்து, பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சமையல் பாத்திரங்களை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என பணியாளர்களை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து முன்னூர் ஊராட்சி காளிபாளையத்தில் தனிநபர் கழிப்பறை கட்டும் பணிகளை பார்வையிட்டார்.ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், முரளிகண்ணன், அரவக்குறிச்சி வட்டாட்சியர் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் செளந்தரவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி